Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

ஜுன் 30, 2020 08:51

காஞ்சீபுரம்: வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200 வீதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம் அரசு வழங்கி வருகிறது. மேலும் இதில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 வீதம் உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெற்று வருவோர் தொடர்ந்து உதவித்தொகை பெற 2-ம் மற்றும் மூன்றாம் ஆண்டு நிதியாண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என தெரிவிக்கும் வகையில் சுய உறுதிமொழி ஆவணத்தை தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காரணத்தால் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறும் பயன்தாரர்கள் இவ்வாண்டின் ஏப்ரல் முதல் மே மாத வரையிலான காலத்திற்கு வரும் ஆகஸ்டு மாதம் வரையில் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இக்கால அவகாசத்தில் சுய உறுதிமொழி ஆவணம் பெறப்பட்ட பின்னரே தொடர்ந்து உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்