Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் விதி மீறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள்

ஜுலை 02, 2020 07:34

வேலூர்: வேலூர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் விதிமுறைகளை மீறி சில்லரை விற்பனையில் ஈடுபட்டனர்.வேலூர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் விதிமுறைகளை மீறி சில்லரை விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 14 எடை எந்திரங்களை பறிமுதல் செய்தனர். அப்போது வியாபாரிகள்இ போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த காய்கறி விற்பனை கடைகள் மாங்காய் மண்டி அருகே உள்ள தற்காலிக மார்க்கெட்டில் கடந்த 29-ந் தேதி இரவு முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காய்கறி மளிகைக்கடை வியாபாரிகள் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி மார்க்கெட்டில் குவிந்தனர்.

மேலும் சில வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர். பொதுமக்கள் சிலர் சில்லரையில் காய்கறிகள் வாங்கி சென்றனர். தற்காலிக மார்க்கெட்டில் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் ஆகியோருக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து தற்காலிக மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் உள்ளே செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

பொதுமக்கள் தங்களை வியாபாரிகள் எனக் கூறிக்கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்று காய்கறிகள் வாங்க தொடங்கினர்.
இதனால் வியாபாரிகள் பலர் விதிகளை மீறி சில்லரை விற்பனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வேலூர் வடக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விதிகளை மீறிய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சில்லரை விற்பனை செய்த 14 கடைகளின் எடை எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடைகளை தவிர மற்ற இடங்களில் வைத்து சில்லரையில் காய்கறிகள் விற்பனை செய்தவர்களை போலீசார் அங்கிருந்து செல்லும்படி கூறினர். அப்போது வியாபாரிகள்இ இங்குக் குறைந்த நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்களும் இங்கு வைத்து தான் காய்கறிகளை விற்பனை செய்வோம் எனக் கூறி வாக்கு வாதம் செய்தனர்.

அதற்கு போலீசார இங்கு 85 கடைகள் மட்டுமே இயங்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். வியாபாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்