Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடை தீவன ஊழல் வழக்கு, லாலு பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?

மார்ச் 16, 2019 06:12

புதுடெல்லி: பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் பிரிக்கப்படாமல் ஒரே மாநிலமாக இருந்தபோது, 1990-களில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத் (வயது 71) அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அங்கு ரூ.900 கோடி மதிப்பிலான கால்நடைத்தீவன ஊழல் நடந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது தொடர்பான 3 வழக்குகளில் லாலு பிரசாத் தண்டிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு ஜார்கண்ட் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அந்த கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி தள்ளுபடி செய்து விட்டது. 

இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யத்தக்கதாக நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்த பின்னர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிய வரும்

தலைப்புச்செய்திகள்