Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிப்பு: டாஸ்மாக் இயங்காது

ஜுலை 02, 2020 10:04

சென்னை: இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழைமைகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. எனினும் கொரோனா அதிகம் பாதித்துள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நிறைய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. கடைகள் திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்து மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தமிழகத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


இதனால் வரும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மேலாளர்கள்  கடைகளை மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்