Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.யில் சட்டம் ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை தேவை: பிரியங்கா

ஜுலை 03, 2020 12:36

புதுடெல்லி: உ.பி.யில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விகாஸ் துபேயை தேடிச்சென்ற போலீசாருக்கும், அங்கிருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரவுடிகள் சுட்டதில் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்