Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக்கில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு: பொய்யான குற்றச்சாட்டு சீனா அலறல்

ஜுலை 04, 2020 08:18

லடாக்: சீனாவை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்ட நாடு என்று கூறுவது தவறு என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையிலான எல்லை மோதல் காரணமாக பிரதமர் மோடி அதிரடியாக லடாக் எல்லைக்கே சென்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில் எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் நாடு. எங்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம். உடனே பதிலடி கொடுப்போம்.

எல்லையில் அத்துமீறுவது எல்லாம் பழைய காலம். அது எல்லாம் இனி நடக்காது. எல்லையில் அத்துமீறும் நிகழ்வுகள் மலையேறி சென்றுவிட்டது. இப்போது வளர்ச்சி குறித்த அரசியல் நடத்த வேண்டியதற்கான காலகட்டத்தில் இருக்கிறோம். வளர்ச்சிதான் நம்முடையக் நோக்கமாக இருக்க வேண்டும். எல்லையையே ஆக்கிரமிப்பது இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது சீனாவை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்ட நாடு என்று கூறுவது தவறு என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீன தூதரகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவிற்கான சீனாவின் தூதரகம் தெரிவித்துள்ள கருத்தில்,  சீனா மொத்தம் 14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதில் 12 நாடுகளின் எல்லை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை முறையான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து இருக்கிறோம்.

எந்த விதமான ஆக்கிரமிப்பு செய்யாமல், முறையாக பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறோம். இந்தநிலையில் சீனாவை விமர்சனம் செய்வது தவறு. அதிலும் சீனாவின் இப்படி ஆக்கிரமிப்பு செய்வதாகச் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று சீனா கூறியுள்ளது.

சீனாவின் இந்த கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்படலாம்  என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்