Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யானைகளின் மரணம்  குறித்து மறைக்க வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை: தெபசிஸ் ஜனா

ஜுலை 05, 2020 07:58

கோவை: யானைகளின் மரணம்  குறித்து மறைக்க வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை என்று வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா கூறினார்.

கோவை மாவட்டத்தில்  யானைகள் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவது தொடர்பாக  கோவை மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா செய்தியாளர்களை  சந்தித்தார்.

அப்போது கோவை வனகோட்டத்தில்   இதுவரை 14 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது எனவும்  யானைகள் மரணம் வழக்கமானதுதான் எனவும்  இது தவறாக பிரச்சாரம்  செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.ஓவ்வொரு  யானைகள்  மரணங்கள் குறித்தும்  முறையான விசாரணை மற்றும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றது எனவும்  அவர் தெரிவித்தார்.

யானைகளின் மரணம்  குறித்து மறைக்க வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை என கூறிய அவர் கடந்த 10 ஆண்டுகளில்  சராசரியான  14 யானைகள் மரணம் என்பது நடந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

2018ம் ஆண்டு  தமிழகம் முழுவதும் 84 யானைகளும் 2019ம் ஆண்டு  108 யானைகளும் 2020 ஆண்டு இதுவரை 61 யானைகளும் உயிரிழந்துள்ளது என தெரிவித்த அவர் வறட்சி காரணமாகவும் போதுமான உணவு இல்லாதது தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால்  யானைகள் உயிரிழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கோவை வன கோட்டத்தில் ஒரே ஒரு யானை மரணம் மட்டுமே இயற்கைக்கு மாறான மரணம் மற்றவை அனைத்தும்  இயற்கையான மரணம்  கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்  வரை 14 யானைகள் இறந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

வனத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் வன ஆர்வலர்கள் கொண்ட  கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவித்தார்.

கோவை வனக்கோட்டத்தில் 10 நாட்களில் 12 யானைகள்  மரணம் என்ற பரப்பப்படும்  தகவல்கள் தவறானது சமூக வலைதளங்களில் இது போன்ற தவறான தகவல்கள் உள்நோக்கத்துடன் பரப்பபடுகின்றது. இது போன்ற  தவறான தகவல்களை பரப்புவர்கள்  மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்