Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்: கே.எஸ். அழகிரி

மார்ச் 16, 2019 06:36

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 

தமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 

இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்தது. 

இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தேர்தல் பிரசாரக்குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தார். இதில் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பிரசாரக்குழு துணைத்தலைவர் ஜே.எம்.ஆரூண், ஒருங்கிணைப்பாளர் குஷ்பூ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பிரசாரக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பேச்சாளர்களுக்கு, எவ்வாறு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்? மேடை பேச்சு எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்