Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகழாய்வு பணி் கீழடியில் எடை கற்கள் கண்டெடுப்பு

ஜுலை 05, 2020 09:59

சிவகங்கை: கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் புதிதாக எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது.

இதற்காக தோண்டப்பட்ட அகழாய்வு குழி அருகே தற்போது இரும்பு உலை அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அகழாய்வு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அதன் கீழ் பகுதி தட்டையாக உள்ளன.

இவை ஒவ்வொன்றும் முறையே 8 18 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வு பகுதி முன்பு தொழில் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள் இரும்பு ஆணிகள் கண்ணாடி மூலப்பொருட்களில் இருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் எடைகற்கள் ஆகியவை அங்கு ஏற்கனவே தொழில்கள் நடந்ததை உறுதிபடுத்தும் ஆதாரங்களாக உள்ளன.

தலைப்புச்செய்திகள்