Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய - வங்கதேச வர்த்தக உறவு மேற்குவங்க அரசால் பாதிப்பு

ஜுலை 05, 2020 10:09

கோல்கட்டா:  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஜூலை 31 வரை 6ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அத்யாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு பெட்ரோபோல் - பெனாபோல் எல்லை வழியாக வரும் சரக்கு வாகனங்களை கடந்த மார்ச் முதலாக அம்மாநில அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு அறிவுத்தல்களை வழங்கியும், முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதற்கு பதிலடியாக, வங்கதேச அரசும் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வரும் சரக்கு வாகனங்களையும் அந்நாட்டு அரசு கடந்த 1-ம் தேதி முதல் அனுமதிக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது. 

ஆனால் நடப்பாண்டில் இதே காலக்கட்டத்தில் இரு தரப்பு வர்த்தகம் ரூ.3,126 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்