Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக்கின் சிந்து நதிக்கரையில்  பிரதமர் நரேந்திர மோடி பூஜை

ஜுலை 05, 2020 06:08

லடாக்: லடாக் எல்லை ராணுவ முகாமுக்கு  சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிந்து நதிக் கரையில் பூஜை செய்து வழிபட்டார்.

இமயமலையின் லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் நமது வீரர் கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, லடாக்கில் உள்ள நிமு ராணுவ தளத்துக்கு திடீர் பயணம் மேற் கொண்டார். அங்கு சீன ராணுவத்தின ருடனான மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், காயம் அடைந்த வீரர்களை சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக, அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி வீர உரையாற்றினார்.

பின் லடாக்கில் உள்ள சிந்து நதிக் கரைக்கு சென்ற பிரத மர் மோடி, அங்கு ‘சிந்து தர்ஷன்’ பூஜையை மேற்கொண்டார். இந்தியாவின் ஒரு மைப்பாடு, அமைதி, சமூக நல்லிணக் கத்தின் சின்னமாக சிந்து நதி விளங்கு கிறது என்பதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பவுர்ணமி நாளன்று இங்கு இந்தப் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

தலைப்புச்செய்திகள்