Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிஎஸ்டி. க்காக ஜெட்லிக்கு விருது அளித்த மன்மோகன்

மார்ச் 16, 2019 06:54

புதுடில்லி : ஜிஎஸ்டி அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்., கட்சியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

2017 ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியதற்காக காங்., கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜிஎஸ்டி.,யால் சிறு தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறது. காங்., தலைவர் ராகுல் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், இது பொருளாதார வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்றார். 

இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த விழாவில், என்ற விருது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் ஜிஎஸ்டி.,யை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டது.  
இந்த விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லிக்கு வழங்கினார். இப்போது இதற்கு ராகுல் என்ன சொல்ல போகிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்.,ன் இரட்டை நிலைப்பாட்டை பலரும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்