Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புல்வாமாவில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜுலை 07, 2020 05:45

 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அப்பகுதியில் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனை முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் புல்வாமா மாவட்டம் கோஷி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே தொடந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்