Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.வில் விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்

ஜுலை 09, 2020 07:30

சென்னை, ஜூலை. 9: பாஜ.க.வின் மாநில கல்வியாளர் பிரிவு  துணை தலைவர் கோ.வெங்கடேசன், கல்வியாளர் பிரிவு மாநிலத் தலைவர் பேராசிரியர் தங்க கணேசனை சந்தித்து  பா.ஜ.கவின் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் படிவங்களை வழங்கினார்.

பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு  மாநில துணை தலைவர் கோ.வெங்கடேசன் தலைமையில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி,  சங்கராபுரம்,  (விழுப்புரம் மாவட்டம்) திருக்கோவிலூர்,  செஞ்சி,  மயிலம்,  வானூர்,  விக்கிரவாண்டி,  திண்டிவனம், விழுப்புரம்,   (கடலூர் மாவட்டம்) சிதம்பரம்,  நெய்வேலி,  பண்ருட்டி,  குறிஞ்சிப்பாடி, கடலூர்,  காட்டுமன்னார்கோவில்,  புவனகிரி,  திட்டக்குடி, விருதாச்சலம்,  (மாயவரம் மாவட்டம்)  மயிலாடுதுறை, சீர்காழி,  திருவிடைமருதூர்,  கும்பகோணம்,  பாபநாசம்,  (அரியலூர் மாவட்டம்),  பெரம்பலூர், குன்னம், வேதாரண்யம், ஆகிய தொகுதிகளுக்கு  உட்பட்ட மாவட்டங்களில், முதல் கட்டமாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது.

சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை  தமிழக பாஜகவின் கல்வியாளர் பிரிவு மாநிலத் தலைவர் பேராசிரியர் தங்க கணேசனை புதுச்சேரியில் சந்தித்து அவரிடம் மாநில துணைத்தலைவர் கோ.வெங்கடேசன் வழங்கினார். 
 உடன் கல்வியாளர் பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்