Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்த ஆண்டு கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்: அமெரிக்க நிபுணர்

ஜுலை 10, 2020 03:16

நியூயார்க்:  இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ள தாக அமெரிக்க நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறினார்.

ஐ.நா. சபையின் கல்வி தாக்கம் பற்றிய ஆன்லைன் அமர்வில், அமெரிக்க தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப் பினருமான டாக்டர் அந்தோணி பாசி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தற் போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசி மருத் துவ பரிசோதனைகள் நம் பிக்கை அளித்து வரும் நிலை யில், இந்த ஆண்டின் இறுதி யில் அல்லது அடுத்த ஆண் டின் தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடுவதற்கான வாய்ப்பு கள் உள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனா வைரசிடம் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொண் டிருக்கிறோம். 

அது கடினமான தொற்றுநோய். அது தொடர்ந்து பரவ வாய்ப்பு உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு நல்ல பொது சுகாதார நடவடிக்கைகள் முக்கி யம் என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்