Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கக் கடத்தல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா

ஜுலை 10, 2020 03:40

திருவனந்தபுரம்:  கேரளா வில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப் படும் ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத் தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய் துள்ளார். அதில், ‘நான் அப்பாவி... எனக்கு எதுவும் தெரியாது. தூதரக அதிகாரிகள் இதில் என்னை சிக்க வைத்து விட்டனர்’ என, தெரிவித் துள்ளார். 

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது; இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய சர்ஜித், ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சர்ஜித் கைது செய்யப் பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலு வலகத்திலிருந்து, ஆறு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்த ஸ்வப்னா, கேரள மாநில அரசின் தகவல் தொழில் நுட்ப துறையில், அதிகாரியாக பணி யாற்றி வந்துஉள்ளார். 

தகவல் தொழில்நுட்ப துறை செயல ராகவும், முதல்வரின் முதன்மை செயல ராகவும் பணியாற்றியவரான சிவசங் கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப் பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து, சிவசங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, கேரள உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுவில் கூறியுள்ளதாவது:தங்கக் கடத் தல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி. என் மீது குற்றப் பின் னணி எதுவும் இல்லை. திருவனந்தபுரத் தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர்.

தூதரக அலுவலகத்திலிருந்து ராஜி னாமா செய்தாலும், அங்குள்ள அதி காரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, சில வேலைகளை செய்து கொடுத்து வந்தேன். தூதரக அலுவலகத்தில் பணி யாற்றும் ரஷீத் காமிஸ் என்பவர், விமான நிலையத்துக்கு வந்திருந்த பார் சலை, சுங்கத் துறை அதிகாரிகள் தர மறுப்பதாகவும், உதவும்படியும், என்னி டம் போனில் பேசினார். 

பார்சலை தர மறுத்தால், அதை, மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கே திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்யும்படி  யும், அவர் வலியுறுத்தினார்.இதற்காக சுங்கத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது தான், என்னை அவர்கள் சந்தேகப்பட்டனர். எனக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்