Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டெல்லி மக்களிடையே ‘சித்தா’வுக்கு திடீர் மவுசு

ஜுலை 10, 2020 03:46

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும், டெல்லியின் முக்கிய பகுதிகளில், தமிழகத்தின் சித்த மருத்துவ கஷாயமான, கபசுர குடிநீர் பிர பலமாகி வருகிறது.

ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல் காரர்கள் என, ஆயிரக்கணக்கா னோர் வசிக்கின்றனர்.இவர் களுக்காக, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலத்தில் அமைக்கப்பட்டது தான், ‘ஆயுஷ் வெல்னஸ்’ கிளினிக். 

இதிலிருக்கும், 10 பேர் கொண்ட சித்த மருத்துவப் பிரிவு, கபசுர குடிநீரை, ஜனாதி பதி குடும்பத்தினர் மத்தியில் மட்டு மல்லாது, அந்த மாளிகை முழு தும் அறிமுகப்படுத் தியுள்ளது. இது குறித்து, இக்குழுவின் தலைவரான சித்த மருத்துவர் இளவரசன் கூறியதாவது: தின மும், 4 முதல், 5 லிட்டர் கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதை, ஜனாதிபதி மாளிகையில் உள்ள அனைவரும், காலையில் பருகிய பிறகே, பணிகளுக்குச் செல்கின்றனர். உரிய அனுமதி பெற்று, டெல்லியின் முக்கிய இடங்களிலும், தினந்தோறும் கபசுர குடிநீரை வினியோகம் செய்து வருகிறோம். 

இதற்கு, அடித்தட்டு மக்களி டையே பெரிய வரவேற்பு உள் ளது. இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழகத்தில் பிரபலமாகியுள்ள சித்த மருத்து வத்தின் பயன்பாட்டை, தலை நகர் டெல்லியிலும் விரிவுபடுத்த முடியுமா என்ற ஆலோசனையில், மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஆயுஷ் ஆகியவை ஒருங் கிணைந்து, கபசுர குடிநீரை உள் ளடக்கிய சித்த மருத்துவ வழி முறைகளை, முறைப்படி அறிவித் துள்ளன.ஜப்தர்ஜங் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள, சித்த மருத்துவ ஆராய்ச் சிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், டெல்லி பொது மக்கள் மத்தியில், கபசுர குடி நீரை கொண்டு சேர்க்கும் பணி யில் இறக்கி விடப்பட்டுஉள்ளனர்.

இது குறித்து, இப்பிரிவின் பொறுப்பாளரான மருத்துவர் மாணிக்கவாசகம் கூறியதாவது: திகார் சிறை காவலர்கள், தமிழ் நாடு இல்ல ஊழியர்களின் குடும் பத்தினர் மற்றும் பத்திரிகையா ளர்களுக்கு, கபசுர குடிநீரை வழங்கினோம். 
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் வினி யோகித்து வருகிறோம். இதன் பலனை கேள்விப்படும் வட மாநில மக்க ளும், ஆர்வமாக வாங்கிக் குடிக் கின்றனர் என அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்