Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் - வெள்ளியில் முகக்கவசங்கள்: தயாரித்த நகைபட்டறை உரிமையாளர்

ஜுலை 15, 2020 06:04

கோவை: கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த நகைபட்டறை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தங்கம் மற்றும் வெள்ளியில் எளிமையாக பயன்படுத்தும் வகையில் முகக்கவசங்களை தயாரித்து வருகின்றார்.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நகைபட்டறை உரிமையாளர் தங்கம் மற்றும் வெள்ளியில் முகக்கவசங்களை தயாரித்து வருகிறார். தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மி.மீட்டர் மெல்லிய கம்பியாக மாற்றி முகக்கவசம் செய்வதாகவும், மக்கள் இவற்றை விரும்புவதால் இதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் இருக்கும் முகக்கவசங்கள் கப் போல் இருக்கும் எனவும், ஆனால் இங்கு மெல்லிய நூல் போன்ற கம்பியால் தயாரிக்கப்படுவதால் துணி முகக்கவசம் போலவே இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆடம்பரமாக தேவை இருப்பவர்களுக்கு இந்த முகக்கவசம் பயன்படும் எனவும் தங்கத்தில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ.2.25 லட்சம் வரை இருக்கும் எனவும், வெள்ளியில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ.15 ஆயிரம் வரை இருக்கும் எனவும் தங்க நகை வடிவமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்