Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதரவற்று திரியும் பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு இல்லங்களில் சேர்க்க கோரிக்கை

ஜுலை 15, 2020 06:05

திருச்சி: பொது இடங்களில் சுற்றித் திரியும், ஆதரவற்ற பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,  முதியோரை, அந்தந்த பகுதி போலீசார் மீட்டு, மறுவாழ்வு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு, ஆதரவற்று பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை துவக்கியது. திருச்சி மாநகராட்சி, புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்  மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநிலப் பெண் அரை நிர்வாணமாக திரிந்து வருகிறார். இடது கை வீங்கி பழைய பிளாஸ்டிக் பையை சுற்றியிருக்கிறார்.

மனநலம் பாதித்த பெண் பொது இடங்களிலேயே உணவு, உறக்கம், காலைக்கடன், மாதவிலக்கு நாட்களை கடக்கின்றார். மேலே உள்ள உடையை பற்றிக் கூட நினைவில்லை. பாதுகாப்பற்று திரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக வாய்ப்புள்ளது. எங்கள் பார்வையில் பட்டவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் வழங்கி வருகிறோம்.

பிச்சை எடுப்பவர்கள் மற்றும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, மனநல ஆலோசனை, தொழிற்பயிற்சி, தொழில் துவங்க கடன் உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்களை அந்தந்த பகுதி காவல் நிலைய காவலர்கள், ரோந்து வரும் போது மனநிலை பாதித்தவர்களை பிச்சை எடுப்பவர்களை மீட்டு, காப்பகங்களிலும், அரசு மறுவாழ்வு இல்லங்களிலும் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்முறை பிச்சைக்காரர்கள் மீதும் ஆதரவின்றி நிர்கதியாய் கைவிட்ட குடும்பத்தினர் மீதும் சட்ட நடவடிக்கை வேண்டுமென வழக்கறிஞர்கள் பேரண்ட்ஸ் அறக்கட்டளை ஜெயந்திராணி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்