Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்160 பேருக்கு கொரோனா தொற்று

ஜுலை 17, 2020 03:51

திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:

திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில காவல் துறையை சேர்ந்த சிறப்புப் போலீசாரில் 60 பேருக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் வினியோகத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 14 பேருக்கும், ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 70 பேருக்கும் ஆக மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 40 அர்ச்சகர்கள் உள்ளனர். அதில் 14 அர்ச்சகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் பவனில் தனித்தனி படுக்கையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்