Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்: குடந்தையில் இன்ஜி. மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஜுலை 17, 2020 04:42

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம்  ஆண்டு படிக்கும் மாணவர்கள் அகமது காமில், பாலகணபதி,  கணேஷ் மற்றும் குமரேசன் ஆகியோர் இணைந்து காற்றின் ஈரப்பதத்தை நீராக மாற்றும் நவீன இயந்திரத்தை பேராசிரியர் பார்த்தசாரதி வழிகாட்டுதலின் அடிப்படையில் வடிவமைத்துள்ளனர்.

இன்றைய சூழலில் மிகவும் சவாலாக உள்ள குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்றின் ஈரப்பதத்தை நீராக மாற்றுகின்றது இந்த புதிய நவீன இயந்திரம். குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் முதற்கட்டமாக கல்லூரி நீர் தேவைக்காக இந்த இயந்திரத்தை பயன்படுத்த உள்ளதாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் உறுதி கூறி உள்ளார்.

மேலும் இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி முதல்வர் முனைவர். பாலமுருகன், துணை முதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். ருக்மாங்கதன், இயந்திரவியல் துறைத்தலைவர் சுந்தர செல்வன் மற்றும் கல்லூரி ஆசிரிய பெருமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்