Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்பரிவார் பிரதிநிதிகளை கைது செய்ய வேண்டும்: பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை

ஜுலை 18, 2020 12:24

திருநெல்வேலி: ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும், பல்சமய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும், சங்பரிவார் பிரதிநிதிகளை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருநெல்வேலியில், பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில்,  காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

சமீப காலமாக, சமூக வலை தளங்களில், இஸ்லாமிய மதத்தைப் பற்றியும், இஸ்லாமியர்களைப் பற்றியும், "இறைத்தூதர்" நபிகள் நாயகத்தைப் பற்றியும்,  அவதூறு பரப்பி, மத துவேசங்களைத் தூண்டிவிட்டு, பல்சமய மக்களிடையே, பிளவுகளை ஏற்படுத்தும்,  சங்பரிவார்  பிரதிநிதிகளான,   மாரிதாஸ், கிஷோர் கே.சுவாமி, வர்மா கார்டூனிஸ்ட் சுரேந்திரகுமார் நடராஜன், கல்யாண ராமன்,   சிவனடியார் மவுண்ட் கோபால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட, காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரும், மனுக்கள் மீது, முறையான விசாரணைகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, உறுதிஅளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் துணைத் தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, செயலாளர் ஹயாத் முகம்மது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின், மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி  மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலை கண்ணன், ஆல் இண்டியா இமாம் கவுன்சில் மாவட்ட தலைவர் மீரான் முஹ்யித்தீன் அன்வாரி உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்