Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

து.முதல்வர் ஓ.பி.எஸ். காரில் இடமில்லை: கொரோனா எதிரொலியால் அன்புக்கட்டளை

ஜுலை 19, 2020 09:54

தேனி: கொரோனா பரவல் எதிரொலியால் கட்சிக்காரர்கள் யாரும் கூட்டமாக நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டாம் எனவும், தன்காரில் டிரைவர், பாதுகாவலர் மற்றும் தான் மட்டுமே பயணிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் ஓ.பி.எஸ். அரசு அலுவல், ஆய்வு தொடர்பான கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

அவ்வாறு அவர் செல்லும்போது அவருடைய வாகனத்தை பின் தொடர்ந்து கட்சிக்காரர்கள் வாகனமும் சாரை சாரையாக செல்லும். இந்நிலையில் அதற்கு தற்காலிக தடை போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்களுக்கு அது தொடர்பான அச்சமும், கலக்கமும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியானவர்கள் விவரத்தை அறியும் போது அனைவருக்கும் ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுகிறது. இதனிடையே எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பல தரப்பட்டோரும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நிவாரண உதவி, மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம், ஆய்வு என தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் சொந்த ஊரில் இருந்தவாறே ஓ.பி.எஸ். கலந்துகொள்கிறார். அவ்வாறு அவர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெரிய படையே அவருடன் பயணிக்கும்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் இன்னும் சில நாட்களுக்கு ஓ.பி.எஸ்.ஸூடன் பெரியளவில் கூட்டமாக வர வேண்டாம் எனக் கட்சியினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுநர், பாதுகாவலர், தாம் உட்பட மூன்று பேர் மட்டுமே காரில் பயணிப்பதாகவும் மற்றவர்களுக்கு ஓ.பி.எஸ். காரில் இடமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்