Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏனாமில் பூமியை நோக்கி சூறாவளி காற்று

ஜுலை 19, 2020 09:58

புதுவை: ஆந்திரா- புதுவை எல்லையில் உள்ள ஏனாமில் கோதாவரி ஆற்றில் வானத்திலிருந்து பூமியை நோக்கி சூறாவளி காற்று சுழன்றடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்திற்குள்பட்டது ஏனாம் பகுதி. இதன் சில பகுதிகள் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்நிநலையில் கோதாவரி ஆற்றில் வானத்திலிருந்து பூமியை நோக்கி சூறாவளிக் காற்று சுழன்றடித்தது.

சில நொடிகள் நீடித்த இந்த சுழன்றடித்த சூறாவளியால் அந்த பகுதியில் உள்ள குடிசைகள் சேதமடைந்தன. அது போல் ஆற்றின் அருகே இருந்த பகுதிகளும் சேதமடைந்தன. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தற்போது லாக்டவுனால் அதிகளவு வாகன போக்குவரத்து ஏதும் இல்லாததால் இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் ஏனாம் பகுதி மக்கள் ஏதாவது நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஏற்படாது என அரசு சார்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை மேற்கோள்காட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் சில தகவல்களின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, ஏனாமில் ஏற்பட்ட சூறாவளி மிகவும் அரிதான நிகழ்வாகும். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் வடசென்னை பகுதியான எண்ணூரில் பூமியிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததை பார்த்தோம். அது போல் 2013ல் செப்டம்பர் மாதம் தென் சென்னையான உச்சண்டியில் இது போன்ற சூறாவளி காற்று ஏற்பட்டதை பார்த்தோம் என்றார்.

ஜூலை மாதத்தில் சூறாவளி என்பது அரிதிலும் அரிது என்கிறார்கள். அதிலும் இந்த சூறாவளி குளிர்ந்த மற்றும் அனல் கலந்து காற்றை அளித்தது. இது போல் பெங்களூரிலும் ஒரு முறை ஏற்பட்டதாக நெட்டிசன்கள் நினைவுகூர்கிறார்கள். டெல்லியில் 1978ம் ஆண்டும், ஒடிஸாவில் 1978ம் ஆண்டும், சூறாவளிகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்