Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சளி மாதிரி சேகரிப்பு முகாமுக்கு மக்களை அழைத்து வர சிறப்பு வாகன வசதி

ஜுலை 19, 2020 06:24

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சளி மாதிரி சேகரிப்பு முகாமுக்கு மக்களை அழைத்து வருவதற்கான சிறப்பு வாகனத்தை ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகரில் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி சேகரிப்பு முகாம்களுக்கு பொதுமக்களை அழைத்து வருவதற்கு சிறப்பு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சுகாதார அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது கொரோனா பரிசோதனை முடிவு வந்த உடன் விரைந்து சென்று அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் அந்த பகுதியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுகாதார பணியாளர்கள் தொடர்ச்சியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு கவச உடைகளை முறையாக அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்