Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த ‘மூலிகை ஏர்கூலர்’

ஜுலை 20, 2020 07:21

காரைக்குடி: தொற்று கிருமிகளை தடுக்க காரைக்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ‘மூலிகை ஏர்கூலர்’ ஒன்றை கண்டுபிடித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி முத்துகுமரேசன். இவருடைய மகன் மதுரைசெல்வன். இவர் கனடா நாட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராக இருந்து வந்தார். தற்போது காரைக்குடி சிக்ரியில் பணியாற்றி வரும் தனது மாமாவும் விஞ்ஞானியான பழனியப்பன் என்பவரின் ஆலோசனையின் பேரில் மூலிகை மூலம் இயங்கும் ஏர்கூலர் ஒன்றை கண்டுபிடித்து உள்ளார். இதுகுறித்து மதுரை செல்வன் கூறியதாவது.

இந்த ஏர்கூலரானது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறி மண்பானையை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மண்பானையின் பக்கவாட்டில் வட்ட அளவிலான துவாரத்தை ஏற்படுத்தி அதன் மேல் பகுதியில் சிறிய மண்சட்டியை உள்புறத்தில் சிறிய அளவிலான துவாரமிட்டு வைக்கவேண்டும்.

அதில் வெட்டிவேர் வைத்து துளசி வேப்பிலை மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து மூலிகை சாற்றை ½ லிட்டர் அளவு எடுத்து 3 லிட்டர் அளவு தண்ணீரை சேர்த்து மண்பானையில் ஊற்ற வேண்டும். இதையடுத்து மின்விசிறியை இயக்கினால் சிறிய மழை தூறல் போன்று குளுமையான காற்றை பெறலாம்.

இந்த மூலிகை காற்றானது நமது உடலில் படும்போது கொரோனா மற்றும் தொற்று கிருமிகள் பாதிப்பு தடுக்கப்படும். இதனால் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கலாம். இவற்றை தயாரிப்பது மிகவும் சுலபம். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஏர்கூலரை தினந்தோறும் 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த மண்சட்டியில் வைக்கப்படும் வெட்டிவேர் மற்றும் மூலிகை சாற்றை 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்