Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு: கவர்னர் தமிழிசையுடன் தெலுங்கானா முதல்வர் ஆலோசனை

ஜுலை 21, 2020 05:47

ஐதராபாத் : தெலுங்கானாவின் ராஜ்பவனில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை முதல்வர் சந்திரசேகரர ராவ் சந்தித்தார். மாநிலத்தின் நீர்ப்பாசன மற்றும் கொரோனா பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கானாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் மாநிலத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை மேம்படுத்துனதற்கான நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரகதிபவனில் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்தும்,  சாலை மற்றும் கட்டிடங்களின் தன்மை குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் மறு ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, நேற்று தெலுங்கானாவின் ராஜ்பவனில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை, மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நீர்ப்பாசனதுறை வசதிகளை சீரமைக்க அரசு எடுத்த முடிவுகளை தொடர்ந்து, ஒருங்கிணைந்த செயலக வளாகத்தின் கட்டிடத்தின் கட்டுமானத்தை ( மாநிலத்தின் மரபு மற்றும் பெருமைகளை பறைமாற்றும் விதமான கட்டிடங்கள்) அமைக்கவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாநிலத்தில் எடுக்கப்படும் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்தும் கவர்னரிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். அத்துடன் மொபைலில் பிரதமர் மோடியுடனான தனது உரையாடலை தெரிவித்தார். தெலுங்கானா பாதிப்பு தொடர்பாக பிரதமரிடமும் முதல்வர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்