Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்தசஷ்டி கவசம் அவதூறு: கருப்பர்கூட்டம் நிர்வாகிகள் மேலும் 2 பேர் கைது

ஜுலை 21, 2020 05:55

சென்னை: கருப்பர்கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் கடவுள் முருகனிடம், உச்சி முதல் உள்ளங்கால் வரையான உடல் உறுப்புகளின் நலன் வேண்டி, பால தேவராயரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம், எளிய மக்களும் உச்சரிக்கும் தமிழ் மந்திரமாக விளங்குகிறது. இதை, 'கருப்பர் கூட்டம்' எனும், யு-டியூப் சேனலில், ஆபாசமாக சித்தரித்து பேசியது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட, 'கருப்பர் கூட்டம்' அமைப்பு சார்பில் சுரேந்தர் உட்பட சிலர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து, ஆபாசமான விமர்சனங்களை முன்வைத்தனர். இறை நம்பிக்கை தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும், இழிவான விளக்கங்களை தெரிவித்து, முருக பக்தர்கள் உட்பட இந்து மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகிய மேலும் 2 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்