Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: ஜூலை 24-ல் வாக்குமூலம் அளிக்கும் அத்வானி

ஜுலை 21, 2020 06:01

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முன்னாள் துணை பிரதமர், எல்.கே.அத்வானி, 24ம் தேதி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆக., 31க்குள் முடிக்க, உ.பி.,யின் லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் துணை பிரதமர், எல்.கே.அத்வானி, 92, அவரது வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வாக்குமூலம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாளை மறுநாள் பதிவு செய்யப்படவுள்ளது.குற்றவியல் நடைமுறை சட்டம், 313ன் கீழ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களை குற்றமற்றவர்கள் என, உறுதி செய்யும் வகையில், இந்த வாய்ப்பினை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்