Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

ஜுலை 21, 2020 06:33

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்