Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டன் காலமானார்

ஜுலை 21, 2020 07:05

போபால்: மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச கவர்னரான லால்ஜி டாண்டன் (85) மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறால் கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், உ.பி., கவர்னராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல், மத்திய பிரதேச கவர்னராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லால்ஜி, உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் அசுதோஷ், டுவிட்டரில் தெரிவித்தார்.

லால்ஜிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛உத்தரபிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த லால்ஜி, ஒரு திறமையான நிர்வாகியாக ஒரு அடையாளத்தை உருவாக்கினார். எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அரசியலமைப்பு விஷயங்களை நன்கு அறிந்தவர்; வாஜ்பாயுடன் நீண்ட மற்றும் நெருக்கமான தொடர்பை கொண்டவர். துக்கமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி' எனப் பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்