Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் கோவில் எரிப்பு: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 21, 2020 02:44

திருப்பூர்: கோவையில் கோவில் எரிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கோயில் எரிப்பு மற்றும் கருப்பர் கூட்டம்  நடவடிக்கையை  கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். கோவை கோவில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுபோல சாமுண்டிபுரம் வடக்கு நகர் மேற்கு 12வது வார்டு பகுதியில் இரண்டு வயது குழந்தை முருகன் வேடமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்  மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் சுரேந்தர் சுந்தர் கார்த்திகேயன், லோகநாதன் மற்றும் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்