Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீதித்துறை குறித்து அவதுாறு கருத்து: பிரஷாந்த் பூஷண் மீது அவமதிப்பு வழக்கு

ஜுலை 22, 2020 06:30

புதுடெல்லி: நீதித் துறை குறித்து, அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் மீது, உச்ச நீதிமன்றம், தானாகவே முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண், சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.மேலும், பீமா -- கோரேகாவ்ன் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, சமூக ஆர்வலர்கள் வரவர ராவ் மற்றும் சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவம் குறித்தும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை, அவரது 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், பிரஷாந்த் பூஷண் பதிவு செய்தார்.இதையடுத்து, பிரஷாந்த் பூஷண் மற்றும், 'டுவிட்டர்' நிறுவனம் மீது, உச்ச நீதிமன்றம், தானாகவே முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.இவ்வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

தலைப்புச்செய்திகள்