Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் ஒரே நாளில் 4,764 பேருக்கு கொரோனா: 55 பேர் பலி

ஜுலை 23, 2020 07:06

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 4,764 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75,833 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 2,050 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 1,519 பேர் அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதே நேரம் 1,780 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் 27,239 பேர் மாநில அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 47,069 பேர் இன்று வரை கொரோனா சிகிச்சயைில் உள்ளனர். அதில் 618 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 36,993 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில் 27,649 பேர் சிகிச்சயைில் இருந்து வருகின்றனர்.

கர்நாடாகாவில் தான் இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஜூலை 22க்குப் பிறகு மாநிலம் முழுவதும் ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்