Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பரிசோதனை துவக்கம்

ஜுலை 23, 2020 07:37

சென்னை: தமிழகத்தில் ‛கோவாக்சின்' கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை, செங்கல்பட்டில் உள்ள எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரியில் இன்று (ஜூலை 23) தொடங்குகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ஐதராபாதில் செயல்படும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் தமிழகம், டில்லி, பீஹார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உ.பி., உள்ளி்ட 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை அளித்து, பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, தன்னார்வலர்கள், 50 முதல், 100 பேருக்கு, மருந்தை செலுத்தி, பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று (ஜூலை 23) சிறிய அளவிலான டோசேஜ் உடலில் செலுத்தப்பட்டு, 14 நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனவும், காலை 9 மணிக்கு மனித உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்