Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜுலை 23, 2020 07:52

புதுடெல்லி: தமிழகம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல், உ.பி.,யில் இரு தொகுதிகள், பீஹார், அசாம், ம.பி., கேரளா மாநிலங்களில் தலா ஒரு தொகுதியும் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க வேண்டிய சூழலில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தற்போதைய சூழலில் தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் உள்பட காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சூழலால் மக்கள் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்