Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா

ஜுலை 24, 2020 06:17

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 1,078 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,110 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக தொற்று 5 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 104 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 115 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் 22,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொதுமுடக்கம் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கோழிக்கோடு, எர்ணாகுளம், பரசல்லா, கொல்லம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 9,458 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 1.58 லட்சம் பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 222 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 106 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 100 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 89 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 83 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 80 பேருக்கும் தொற்று ஏற்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்