Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக்கில் மீண்டும் வாலாட்டும் சீனா

ஜுலை 24, 2020 07:08

புதுடெல்லி: லடாக்கில் பாங்கோங் த்சோ மற்றும் கோக்ராவில் சீனா தனது படைகள் விலக்கி கொள்ள மறத்துவிட்ட நிலையில், பதற்றத்தை தணிக்க விரைவில் அதிக சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள நான்கு சந்திப்பு பாய்ண்டுகளில் சீன படைகள் இன்னமும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. கோக்ராவில் உள்ள இரண்டு இடங்கள் மற்றும் பாங்கோங் த்சோ மற்றும் ரோந்து பாய்ண்ட் 17 ஏ ஆகியவற்றிலிருந்து பின்வாங்க சீனத் துருப்புக்கள் தயக்கம் காட்டியுள்ளன. இதனால் இரு தரப்பினரின் உயர்மட்ட ராணுவ கமாண்டர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என ராணுவத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதம் 15ம்தேதி இந்தியா சீனா இடையே எல்லையில் மோதல் ஏற்பட்ட பிறகு இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்தது. வெளியுறவுத்துறை மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு படைகளும் சண்டை நடந்த கால்வான் பகுதியில் படைகளை விலக்கி கொண்டன. இருந்த போதிலும் பாங்கோங் த்சோ மற்றும் கோக்ராவில் படைகளை விலக்கி கொள்ள சீன ராணுவம் தயங்குகிறது. இருநாடுகளின் எல்லை சந்திப்பு புள்ளியான குறிப்பிட்ட நான்கு இடங்களில் படைகளை விலக்கி கொள்ள சீனா மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் இந்தியா சீனா இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் படைகளை விலக்கி கொள்ளும் செயல்முறைகள் நின்றுவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

முரண்டு பிடிக்கும் சீனா உடன் மற்றொரு ராணுவ அல்லது ராஜதந்திர பேச்சுவார்த்தை தேவைப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாங்காங் த்சோவின் நிலைமை குறித்தும் எல்லைக்காட்டுப்பாட்டு கோட்டு பகுதி, மற்றும் ராணுவ வீரர்களின் பின்வாங்கல் குறித்தும் பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது. இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள்  தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு குழுவின் மற்றொரு கூட்டமும் விரைவில் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இதுபற்றி கடந்த வியாழக்கிழமை கூறுகையில் "நான் முன்னர் தெரிவித்தபடி, எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மதித்து நடப்பதுதான் எல்லைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாகும். கடந்த 1993 முதல் இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் இதை உறுதி செய்துள்ளன. ஜூன் 26 ம் தேதி எனது அறிக்கையில், இந்த ஆண்டு சீனப் படைகளின் நடத்தை, பெரிய அளவில் படைகளை நிறுத்துவது, நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் உட்பட, நியாயப்படுத்த முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள் அனைத்தும், இருநாடுகளுக்கும் இடையேயான அனைத்து பரஸ்பர ஒப்பந்தங்களையும் முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் இருக்கிறது" என்று குறிப்பிட்டேன். 

"எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதி கவனிப்பதற்கும் மதிப்பதற்கும் இந்தியா முழுமையாக உறுதியளித்துள்ளது என்பதையும், உண்மையான எல்லைக்கோட்டு நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதையும் நாங்கள் சீனாவிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா  கூறினார்.

தலைப்புச்செய்திகள்