Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜுலை 24, 2020 07:31

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமானிகள் குழு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் குழு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத்திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 137 நாடுகளில் இருந்து 5,03,990 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் உறுதி படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஏப்.,1 ம் தேதி ஆறுமாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியம் இல்லா விடுப்பு எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஊழியர்களின் சம்பள வெட்டு,ஊதியமின்றி கட்டாய விடுப்பு போன்றவை பேரழிவு தரக்கூடிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தகூடும். நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காக சேவை செய்வோம். அதே நேரத்தில் நிதிக்கடன்கள் எங்களின் எதிர்காலத்தை அழிக்க கூடும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்