Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் நாளை மாலை முதல் முழு ஊரடங்கு அமல்

ஜுலை 24, 2020 04:38

கோவை: கோவையில் மேலும் 187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நாளை(ஜூலை 25) மாலை முதல் 27 காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2966 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,275 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, மாவட்டத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளை மாலை 5 மணி முதல் 27 ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஞாயிறு தோறும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கோவையில் சனிக்கிழமை மாலை முதல் இறைச்சி வாங்க மக்கள் அதிகம் கூடுகின்றனர். இதனால், கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்