Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரக்ஷா பந்தன்: மோடி ராக்கிக்கு மவுசு அதிகரிப்பு

ஜுலை 25, 2020 06:04

புதுடெல்லி: இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கிக்கு மவுசு கூடி வருகிறது.

வரும் ஆக., 3 ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு வரையில் ரக்ஷா பந்தன் விழாவில் முக்கிய பங்குபெறும் கைகளில் கட்டப்படும் கயிறு சீனா தயாரிப்புகளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியல் இந்தியா-சீன படையினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி தன்னம்பிக்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்திய வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இந்துஸ்தானி ராக்கியை பயன்படுத்தி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தனை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே ராக்கி கயிறு தயாரிக்கப்படுவதால் வேலைவாய்ப்பு அதிகரித்து இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து வர்த்தகர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்களும் இந்திய ராக்கி தான் வேண்டும் என கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால் சீன ராக்கிக்கான சந்தை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை . இதற்கு முன்னர் வெளிநாட்டிற்கு சென்ற பணம் தற்போது நாட்டிற்குள்ளேயே தங்க உள்ளது. என கூறினர்.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் நாங்கள் இந்திய ராக்கியை மட்டுமே வாங்குவோம். எவ்வளவு விலை குறைாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சீன ராக்கிகளை வாங்க மாட்டோம் என கூறினர்.

தலைப்புச்செய்திகள்