Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினி: ரூ.100 அபராதம் விதிப்பு

ஜுலை 25, 2020 06:08

சென்னை: 'சீட் பெல்ட்' அணியாமல்,கார் ஓட்டியதாக, நடிகர் ரஜினிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை வாசிகள், பிற மாவட்டங்களுக்கு செல்ல, அரசிடம் முறையாக 'இ - பாஸ்' பெற வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரம் உள்ளிட்டவைக்கு மட்டுமே, இ - பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், நடிகர் ரஜினி நேற்று முன்தினம், அவரது பண்ணை வீடு உள்ள கேளம்பாக்கத்திற்கு, மருத்துவ அவசரமாக, இ - பாஸ் பெற்று சென்றது சர்ச்சையை கிளப்பியது.

அதுமட்டுமின்றி, ஜூன் 20ம் தேதி, கேளம்பாக்கம் செல்லும் போது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக, ரஜினிக்கு போலீசார் அபராதம் விதித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. சென்னை மாநகரபோலீஸ் எல்லை பகுதியை கடந்து, செங்கல்பட்டு போலீஸ் எல்லை பகுதியில் நுழைந்தபோது, சீட் பெல்ட் அணியாமல், கார் ஓட்டிய அவருக்கு, தாழம்பூர் போலீசார் அபராதம் விதித்துஉள்ளனர்.

இந்த தகவல், தற்போது, இ - பாஸ் கேட்டு, ரஜினி விண்ணப்பித்த போது தான் தெரிய வந்துள்ளது. அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, அவருக்கு தாழம்பூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதும், அந்த அபராத தொகையை, அவர் செலுத்தாமல் இருப்பதும் கண்டு அறியப்பட்டது. இதையடுத்து, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உடனடியாக, அவர் அந்த அபராதத்தை செலுத்திய பின், அவருக்கு, இ - பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்