Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிழக்கு லடாக்கில் சீனப்படைகள் முற்றிலும் காலி செய்ய வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

ஜுலை 26, 2020 06:23

புதுடெல்லி: இந்திய சீன எல்லை பிரச்னை தொடர்பான 17 வது ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு மற்றும் அமைதி திரும்ப இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது

கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சகத்தைச் சேர்ந்த கிழக்கு ஆசிய இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் சீனா சார்பில் வெளியுறவு விவகாரங்களுக்கான எல்லை மற்றும் பெருங்கடல்துறை பொது இயக்குனர் ஹோங் லியாங் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக உறவு, மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாவதற்கு சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதி, ரோந்து பகுதி 15 மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா பகுதிகளில் இந்திய மற்றும் சீனப் படைகள் வாபஸ் பெறப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட முக்கிய இடங்களில் இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டாலும் பாங்கோங் சோ லேக் பகுதியில் இன்னும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. கிழக்கு லடாக்கின் எல்லைக் கோட்டில் 40,000க்கும் அதிகமான சீனவீரர்கள் இன்னும் காலி செய்யவில்லை. இதற்காக வரும் வாரத்தில் ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்