Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டம் நாளை துவக்கம்

ஜுலை 26, 2020 07:34

சென்னை: ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் நாளை (ஜூலை 27) தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம், இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் சமீபத்தில் அறிவித்தார்.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.

காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் இபிஎஸ் நாளை (ஜூலை 27) தொடங்கி வைக்கிறார்.

தலைப்புச்செய்திகள்