Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்கள் கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்க்கவும்; பா.ஜ.,வுக்கு உத்தவ் தாக்கரே சவால்

ஜுலை 27, 2020 07:30

மும்பை: மஹா., கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து காட்டுங்கள் என பா.ஜ.,வுக்கு அம்மாநில முதல்வரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் அவர் அளித்துள்ள பேட்டி: இந்தியாவில் சீன நிறுவனங்கள் தொழில் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்த தேசிய கொள்கை முடிவை பிரதமர் எடுக்க வேண்டும். மஹா., அரசு, சீனாவுடனான ஒப்பந்தங்களை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. சீன அதிபரை இந்தியா அழைக்கும் நிலை ஏற்பட்டால், அந்நாட்டுடன் வணிக வாய்ப்புகள் தொடரும்.

ஏழைகளின் வாகனமாக மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா போன்றது எனது அரசு. அதனை கட்டுப்பாட்டுடன் ஓட்டும் கைபிடி என்னிடம் உள்ளது. கூட்டணியில் உள்ள காங்., தேசியவாத காங்., கட்சிகள் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்துள்ளன. தேவைப்படும் போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி விடுகிறேன். எங்களுக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. அரசும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எங்கள் அரசு ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக ஆட்சி அமைத்துள்ளது என விமர்சிக்கிறீர்கள். அரசை கவிழப்பது மட்டும் ஜனநாயகமா? எதிர்கட்சிகளின் கைகளில் எனது அரசின் எதிர்காலம் இல்லை. முடிந்தால், எங்கள் அரசை இப்போதே கவிழ்த்து காட்டுங்கள் பார்க்கலாம்?. இவ்வாறு எதிர்கட்சியான பா.ஜ.,வுக்கு உத்தவ் சவால் விடுத்தார்.

தலைப்புச்செய்திகள்