Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூலை 30-ல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

ஜுலை 28, 2020 06:20

புதுடெல்லி: ''காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தலைவரை தேர்வு செய்வது, அவசியமானது என காங். மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் குரல் எழுப்பியுள்ள நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா வரும் ஜூலை 30-ல் ராஜ்யசாப எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2019- லோக்சபா தேர்தல் தோல்வியையடுத்து காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக அவரது தாயார் சோனியா, ஓராண்டாக நீடிக்கிறார். இதனால் காங்கிரஸ் முழு நேர தலைவரின்றி இயங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுலை மீண்டும் தலைவராக பொறுப்பேற்கச் செய்வதில், கட்சியின் சில தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ''கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை,'' என, காங்., இளம் தலைவர்களில் ஒருவரும், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான, சந்தீப் தீட்சித் கூறியுள்ளார். கடந்த ஜூலை 11-ம் தேதி முன் காங். லோக்சபா எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது. இதில் சோனியா உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பெரும்பான்மை எம்.பி.க்கள் ராகுலை மீண்டும் தலைவராக்க ஆதரவு குரல் எழுப்பினர்.

ராகுலுக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவை தொடர்ந்து, ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் உள்கட்சி மோதலில், தலைமைக்கு எதிராக கொடி உயர்த்தி உள்ளார். இதனால், ம.பி.,யை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும், காங்., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாததால், இது போன்ற பிரச்னைகளை கையாள முடியாததற்கு காரணம் எனவும், இதனால் கட்சிக்குள் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் வரும் ஜூலை 30-ம் தேதி சோனியா தலைமையில் காங்.ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது, ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்