Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 20-ந்தேதி அறிவிப்பு

மார்ச் 18, 2019 05:41

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்