Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் கொரோனா பரவல் குறைந்தது: மக்கள் நிம்மதி

ஜுலை 29, 2020 06:33

மும்பை : மும்பையில் கடந்த 100 நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் நேற்று (ஜூலை 28) 700 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்ததால், மும்பை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாட்டில் அதிக பாதிப்புள்ள மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது.

மும்பையில் கடந்த 100 நாடகளாகவே, தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 700 பேருக்கு மட்டுமே அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மஹா., அமைச்சரும், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் மகிழ்ச்சியான செய்தி என பதிவிட்டுள்ளார். மேலும் 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தபோதும், குறைவான பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் 3 மாதங்களுக்கு பிறகு நிம்மதி ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்