Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிமாநில தொழிலாளர்கள், மீண்டும் தமிழகம் திரும்ப வழிகாட்டி நெறிமுறை: அரசு வெளியீடு

ஜுலை 29, 2020 07:20

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, சொந்த மாநிலங்களுக்கு சென்ற, வெளிமாநில தொழிலாளர்கள், மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான, வழிகாட்டி நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனங்கள், 'இ- - பாஸ்' பெற, அந்ந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, விண்ணப்பிக்க வேண்டும்.அதில், தொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண், பணியாற்றும் இடத்தின் முகவரி, வாகன எண், தனிமைப்படுத்தப்படும் இடம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை, மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து, 'ஆன்லைன்' வழியாக, அனுமதி அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை, அந்தந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

தொழிலாளர்களை, பஸ், வேன் போன்றவற்றில் அழைத்து வரும் போது, அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன், உடல் வெப்ப நிலையை, பரிசோதிக்க வேண்டும். தமிழகம் திரும்பும் வெளி மாநில தொழிலாளர்கள் அனைவரும், அந்தந்த நிறுவனங்களின் செலவில், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட வேண்டும். தொற்று இல்லை என்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டும்.

தொழிலாளர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், நோய் அறிகுறி இருந்தால், அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள், பணிபுரியும் இடத்தில், முகக் கவசங்கள் அணிய வேண்டும். அடிக்கடி, கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் தங்கும் இடங்கள், காற்றோட்ட வசதியுடன், சுகாதாரமாக இருப்பதை, நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்