Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிராவில் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு

ஜுலை 30, 2020 06:16

மும்பை: கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மஹாராஷ்டிரா அரசு ஊரடங்கை ஆக.31- வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், இரண்டு கட்ட தளர்வுகளை, மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்தது.இந்நிலையில், ஆகஸ்ட், 1 முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

அம்மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள போதிலும் ஊரடங்கை தளர்வுகளுடன் ஆக.31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் ஆக.5 முதல் ஷாப்பிங் மால்கள், மார்க்கெட் ,வணிக வளாகங்கள், உணவகங்கள், தியேட்டர்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதி சடங்கு நிகழச்சிகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்